Monday, September 26, 2011


சுய இன்பம் என்பது என்ன ?





இன்று பத்திரிகைளில் உடலுறவு பற்றி மருத்துவர்கள் பதில் அளித்து வருகின்றனர். அது பற்றி உங்களது கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை. இதுபோன்ற கட்டுரைகளில் மருத்துவர்களின் கருத்துக்களை பெற்று வெளியிடுவது நன்று.

கட்டுரையில் சுய இன்பத்தால் சக்தி குறைந்துவிடும் என்ற ரீதியில் எழுதியுள்ளீர்கள். மருத்துவர்களின் பதில்களின் அடிப்படையில் அது முற்றிலும் தவறான ஒன்று. சக்தி இருந்தால்தான் ஒரு ஆண்மகனால் சுயஇன்பம் பெறமுடியும்.

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் சுய இன்பத்தில் ஈடுபடலாம். அதில் மருத்துவ ரீதியாக எந்தவித ஆரோக்கிய கேடும் இல்லை. ஆனால் ஆணுறுப்பில் வலி, புண்கள் ஏற்படலாம். உடலில் சக்தி இல்லாத ஒருவரால் சுய இன்பம் பெற இயலாது.

ஆனால் சுய இன்பத்தால் என்ன பிரச்சனை என்றால், அது வேலையில் உள்ள கவனத்தை திசை திருப்புவதாக இருக்கும். எனவே மருத்துவர்கள், உங்களுக்கு உண்மையிலேயே உடலுறவு உந்துதல் ஏற்பட்டால் மட்டுமே சுய இன்பம் அனுபவியுங்கள் என்று சொல்கின்றனர்.

இன்னொரு விஷயம், சுய இன்பம் மட்டுமே கண்டு வந்த ஒரு புதிதாக ஒரு பெண்ணிடம் உறவு கொள்ளும்போது அதே வேகம் உதவாது. ஏனெனில் இங்கே சுய இன்பம் இருவர் இன்பமாக மாறுகிறது. அவ்வாறு மாறும்போது அவர் அந்த பெண்ணையும் சுகப்படுத்த வேண்டியுள்ளது. அவர் மட்டும் சுகமடைந்தால் அது அந்த பெண்ணிற்கு உதவாது.

மாறாக பெண்கள் இன்பமடையும் நேரமும் வேறுபடுகிறது. அவர்களுக்கு தூண்டுதல் தேவைப்படுகிறது. ஆண்களுக்கு ஆண்குறியில் மட்டுமே சுகம், பெண்களுக்கு உடல் முழுவதும் சுகம் ஏற்படுகிறது. எனவே காமம் அவர்களது உடல் முழுவதும் பரவும் வரை ஒரு ஆண் தூண்டுதலில் ஈடுபட வேண்டும்.

சுய உணர்வு காரணமாக விரைவாக விந்து வெளியாகும் பிரச்சனை ஏற்படலாம். அதனை நிறுத்தி நிறுத்தி சுய இன்பம் அனுபவித்தலின் மூலம் கட்டுப்படுத்தலாம்.


திருமணம் ஆகாதவர் மட்டுமே சுய இன்பம் காண வேண்டும் என்று பொருளில்லை. திருமணம் செய்தவர்களும் துனைவி அருகே இல்லாதபோது, உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும்போது ஆண்கள் காமத்தை தணிக்க சுய இன்பத்தில் ஈடுபடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆண்களைப் போலவே பெண்களும் சுய இன்பத்தில் ஈடுபடலாம். அதில் தவறில்லை. இது பாலியல் நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இருபாலருக்கும் உதவும்.


மற்றபடி சுய இன்பத்தினால் எந்தவொரு தவறும் இல்லை என்பதே மருத்துவர்களின் கருத்து. ஆனால் அதனை ஒரு பழக்கமாக ஆக்கிக் கொள்ளாமலும் தங்களது வேலைகளில் இடையூறு ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும்.

No comments:

Post a Comment